நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் மறியல்
ராணிப்பேட்டை,:ராணிப்பேட்டை அருகே, பானாவரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 20 நாட்களாக நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து, விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் ரங்காபுரம் கூட்ரோடு அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த, 20 நாட்களுக்கு முன்பு, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை விற்பனைக்கு பதிவு செய்து, கொண்டு சென்றனர்.
ஆனால், நேற்று வரை நெல் கொள்முதல் செய்யப்படாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள், திடீரென அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பானாவரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்