சூறைக்காற்றில் வாழை சேதம்

திருச்சி:துறையூர் அருகே எரகுடி பகுதியில் சூறைக்காற்று வீசியதில், 1,500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, எரகுடி ஊராட்சி பகுதி விவசாயிகள், 100க்கும் அதிகமான ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளனர். தற்போது, வாழைத்தார் அறுவடை தருவாயில் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு, பலத்த சூறாவளி காற்று வீசியதால், 1,500க்கும் அதிகமான வாழை மரங்கள், தாருடன் முறிந்து சாய்ந்துள்ளன. இதனால், ஏக்கருக்கு 1.50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர். சேதத்தை கணக்கிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement