டூவீலரில் ரூ.4 லட்சம் திருட்டு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார், சாய்பாபாபா தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 39. பாகலுார், ஏ.பி., கேட் அருகே செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று காலை, பாகலுார் அருகே, வெலத்துார் சர்க்கிளில் உள்ள ஒரு வங்கியில், தன் கணக்கிலிருந்து, 4 லட்சம் ரூபாய் எடுத்துள்ளார். அதை, தன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் சீட்டின் அடியில் வைத்துள்ளார்.

காலை 11:00 மணியளவில், பாகலுார் போலீஸ் ஸ்டேஷனை அடுத்துள்ள பேக் கடை வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, பேக் வாங்க சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர், சுரேஷ் ஸ்கூட்டரின் சீட்டை உடைத்து உள்ளேயிருந்த, 4 லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர்.

இக்காட்சி அருகிலிருந்த, 'சிசிடிவி'யில் பதிவானது. சுரேஷ் புகார் படி, பாகலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement