வெடிச்சத்தத்தால் அச்சப்பட தேவையில்லை: கலெக்டர்
திண்டுக்கல் கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேசிய நில அதிர்வு மைய இணையதளத்தில் நில அதிர்வுகள் குறித்த பதிவுகள் காணப்படவில்லை. தொடர்ந்து ஏற்படும் திடீர் ஒலியோசை தொடர்பாக அண்ணா பல்கலை புவியியல், நிலநடுக்கவியல் தொடர்பான துறையின் 4 நிபுணர்கள் அடங்கிய குழு ஏப்., 1 முதல் ஆய்வு மேற்கொண்டதில் நிலநடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
தொடர்ந்து அதிகபடியான சத்தம் ஏற்படுவதற்கான உரிய காரணங்களை துல்லியமாக கண்டறியும் பொருட்டும் அதற்கேற்றவாறு மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வெடிச்சத்தம் ஆய்வு செய்திட புவியியலாளர்கள், நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றினை திண்டுக்கல் மாவட்டத்திற்கு மீண்டும் அனுப்பு கோரப்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்கவியல் மையத்தை சேர்ந்த நிபுணர்கள் குழுவானது விரைவில் ஆய்வு செய்ய உள்ளது. அதிக ஒலியுடன் கூடிய அதிர்வு நிலநடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என்பதால் மக்கள் அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும்
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி