போலீசுக்கு பயந்து ஜன்னல் வழியாக தப்பி ஓடிய அஜித் பட நடிகர்

திருவனந்தபுரம்:போதையில் நடிகையிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரில் விசாரிக்கச் சென்ற போலீசை கண்டு லாட்ஜில் தங்கி இருந்த நடிகர் ஜன்னல் வழியாக தப்பி ஓடினார்.

கேரள மாநிலம் பொன்னானி பகுதியைச் சேர்ந்தவர் நடிகை வின்சி அலோஷியஸ். விக்ருதி என்ற மலையாள சினிமாவின் மூலம் 2019 - ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானார். ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக கூறினார்.

அந்த நடிகர் ஷைன்டாம் சாக்கோ என்றும் பெயரை வெளியிட்டார். புகார் பற்றி விசாரணை நடத்த முடிவு செய்த போலீசார் சாக்கோ, கேரள மாநிலம் கலூரில் உள்ள ஓட்டலில் இருப்பதாக அறிந்து அங்கு சென்றனர். போலீசை பார்த்ததும் சாக்கோ ஓட்டலின் மூன்றாவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக இரண்டாவது மாடியில் குதித்து அங்கிருந்து நீச்சல் குளத்தில் தாவி படிக்கட்டு வழியாக தப்பி ஓடிவிட்டார். இந்த காட்சிகள் ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அட்லி என்ற படத்தில் சாக்கோ நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement