இ.சி.ஆரில் பைக் மோதி பெண் பலி 

புதுச்சேரி: பெரிய காலாப்பட்டைச் சேர்ந்தவர் சுந்தரி, 57. இவர் நேற்று காலை வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க, அருகேயுள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, டி.வி.எஸ்., ேஷாரூம் எதிரே இ.சி.ஆரை சுந்தரி கடக்க முயன்றபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது.

இதில், படுகாயமடைந்த சுந்தரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து சுந்தரி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில், வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement