தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதலில் தேசிய அளவில் புதுச்சேரிக்கு முதலிடம்
புதுச்சேரி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டி பறிமுதலில் தேசிய அளவில் புதுச்சேரி முதலிடம் இடம் பிடித்துள்ளது.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற பிரதமர் வலியுறுத்தினார். அதன்படி ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, , விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு கடந்த 2022ம் ஜூலை 1 ம்தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் 2019 ம் ஆண்டே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்ததால் 2022ம் ஆண்டில் இருந்து தீவிரமாக பிளாஸ்டிக் ஒழிப்பு நடமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
நகராட்சி,கொம்யூன் பஞ்சாயத்துகளில் பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.இதற்கிடையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் பருவநிலை அமைச்சகம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்து வருகின்றது.
அன்மையில் நடந்த தேசிய ஆய்வு கூட்டத்திற்கு பிறகு பிளாஸ்டிக் ஒழிப்பில் அனைத்து மாநிலங்களின் நிலைமை மத்திய சுற்றுச்சூழல் வனம், பருவநிலை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 7,510 ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 27,229.34 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் பிளாஸ்டிக் பறிமுதல் அடிப்படையில் புதுச்சேரி தேசிய அளவில் முதலிடமும், ஆய்வு அடிப்படையில் தேசிய அளவில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. 2024ம் ஆண்டில் புதுச்சேரி மாநிலத்தில் தொழிற்சாலை, கடைகளில் மொத்தம் 1305 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 15 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
எதற்கெல்லாம் தடை
பிளாஸ்டிக் குச்சிகளுடன்கூடிய காது குடையும் பஞ்சு, பிளாஸ்டிக் குச்சிகளுடன்கூடிய பலூன்கள், பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ்க்ரீம் குக்சிகள், அலங்காரத்துக்கான தெர்மோகோல், பிளாஸ்டிக் தட்டுகள், குவளைகள், பிளாஸ்டிக் கத்தி, ஸ்பூன், போர்க், உறிஞ்சுக் குழல், டிரே மற்றும் ஸ்வீட் பாக்ஸ், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்கள், 100 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி பேனர்கள் போன்றவை அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தடுக்க, தேசிய மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுவதுடன், மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து, தடை செய்யப்பட்ட பொருள்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு எடுத்துச் செல்வதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.
மேலும்
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி