மாணவி மாயம்

கடலுார்: பண்ருட்டி, முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகள் அபிநயா, 20; கடலுார் அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி டைலரிங் படித்து வந்தார்.

கடந்த 9ம் தேதி விடுதியிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement