தமிழில் பெயர் பலகை: ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி: பண்ருட்டியில் வர்த்தக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சிவா, கமிஷனர் கண்ணன், சுகாதார அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் பத்மா வரவேற்றார்.
வர்த்தகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் வரும் 15ம் தேதிக்குள் தமிழில் பெரிய எழுத்துக்களில் பெயர் பலகைகள் மாற்ற வேண்டும்.
இதுகுறித்து வணிக நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த துண்டு பிரசுரம் வழங்கப்படும்.
தமிழில் பெயர் பலகை வைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் நல அலுவலர் தெரிவித்தார்.
கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், நிர்வாகிகள் கருணாநிதி, ஆறுமுகம், கவுன்சிலர்கள் கிருஷ்ணராஜ், சண்முகவள்ளி பழனி, ராமலிங்கம், கதிர்காமன், கவுரி அன்பழகன், தி.மு.க., அவை தலைவர் ராஜா பங்கேற்றனர்.
மேலும்
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: ஹிந்து பெண்களுக்கு மகளிர் கமிஷன் ஆறுதல்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ