மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

விருத்தாசலம்: சாலை பணிக்கு சாம்பல் மண் கொட்ட சென்ற லாரி டிரைவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.

குறிஞ்சிப்பாடி, சந்தனகுளம் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்,34; லாரி டிரைவர். இவர் கருவேப்பிலங்குறிச்சி அடுத்த கிளிமங்கலம் கிராமத்தில் நடக்கும் சாலை பணிக்கு, நேற்று நெய்வேலியில் இருந்து டாரஸ் லாரியில் சாம்பல் மண் ஏற்றிச் சென்றார்.

கிளிமங்கலம் கிராமத்தில் மண்ணை கொட்டுவதற்காக, லாரியில் ஏற்றி வந்த மண் மீது மூடப்பட்டிருந்த தார்பாயை அகற்றுவதற்கு லாரி மீது ஏறினார். அப்போது, எதிர்பாராத விதமாக, அவ்வழியாக செல்லும் மின்கம்பி மோகன்ராஜ் மீது உரசியதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement