ரயில்வே பாலத்தின் அடியில்குவிந்துள்ள குப்பையால் சீர்கேடு


ரயில்வே பாலத்தின் அடியில்குவிந்துள்ள குப்பையால் சீர்கேடு


நாமக்கல்:நாமக்கல்-சேந்தமங்கலம் சாலை, துறையூர் சாலை, திருச்சி சாலை பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
அந்த பாலத்தின் அடிப்பகுதியில் காலியாக உள்ள இடங்களில், கட்டட கழிவுகளை கொட்டி குவித்துள்ளனர். அதே போல், திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தின் அடியில், பல்வேறு பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையை கொட்டி குவிக்கின்றனர். சில நேரம், அந்த குப்பைக்கு தீவைத்து விடுவதால், அப்பகுதி மக்களின் சுகாதாரம் பாதிக்கிறது.
புகை மண்டலாமாக காணப்படுகிறது. மாநகராட்சி நிர்வகம் கவனம் செலுத்தி, ரயில்வே பாலத்தின் அடியில் கொட்டப்பட்டுள்ள கட்டடக்கழிவு, குப்பைகளை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement