வக்ப் வாரிய சட்ட திருத்தம்: கம்யூ., கட்சி ஆர்ப்பாட்ட
வக்ப் வாரிய சட்ட திருத்தம்: கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:வக்ப் வாரிய சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, கம்யூ., கட்சி சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டக்குழு உறுப்பினர் சிவகுமார் தலைமை வகித்தார். அதில், முஸ்லிம் மக்களை பாதிக்கும் வக்ப் வாரிய சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கக்கூடது. மத்திய பா.ஜ., அரசு, எதேச்சாதிகார முறையில் செயல்படுவதை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் அன்புமணி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், குழந்தான், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொது செயலாளர் தனசேகரன், போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில செயலாளர் முருகராஜ், மாவட்ட குழு உறுப்பினர் செங்குட்டுவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* இதேபோல், வெண்ணந்துார் ஒன்றியக்குழு சார்பில், வெண்ணந்துார் காமராஜர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் செங்கோட்டுவேல் தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
மேலும்
-
கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து; இத்தாலியில் 4 பேர் பரிதாப பலி
-
சிறந்த திறமை, சிறந்த பிரதமர்: இத்தாலி பிரதமர் மெலோனியை பாராட்டிய டிரம்ப்!
-
ஜொலிக்கும் ராகுல் தவிக்கும் ஆர்.சி.பி.,
-
40வது தேசிய இளைஞர் கூடைப்பந்து போட்டி 2ம் இடம் பிடித்த கர்நாடக பெண்கள் அணி
-
12,500 அடி உயரம் கொண்ட கேதார்கந்தா மலை உச்சியை அடைந்த 8 வயது சிறுமி
-
கார் ரேசில் சாதனை படைக்கும் கர்ணா கடூர்