நடிகர் சயிப் வழக்கு குற்றப்பத்திரிகை 'லேட்'

மும்பை : பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் தாக்கப்பட்டு, மூன்று மாதத்துக்கு பின், இது தொடர்பான வழக்கில் மும்பை கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் சயிப் அலிகான், 54, மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ரா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்.

ஜன., 16ல் சயிப் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், அவரை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த நடிகர், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

இந்நிலையில், சயிப் அலிகானை கத்தியால் குத்தியதாக, வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது சரிபுல் இஸ்லாம், 30, என்பவரை ஜன., 19ல் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் பாந்த்ரா போலீசார், மூன்று மாதத்துக்கு பின் கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் குற்றவாளி இஸ்லாம், நடிகரை தாக்கியதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement