பெண்ணை ஏமாற்றி பணம், நகை பறித்த வாலிபருக்கு வலை

புதுச்சேரி: இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பணம், நகையை பறித்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி நகரப்பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் 32 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

குணசேகரன், கடந்த 2020ம் ஆண்டு முதல் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் பல முறை உல்லாசமாக இருந்து வந்தார்.

அப்பெண்ணிடம் இருந்து குணசேரகன் 3 லட்சம் ரொக்கம் மற்றும் 2 சவரன் நகைகளை வாங்கி செலவு செய்தார். குணசேகரனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அப்பெண் வலியுறுத்தியபோது, அவரிடம் தகராறு செய்தார்.

இந்நிலையில், குணசேகரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயிக்கப்பட்டதால், மனமுடைந்த அப்பெண் கடந்த 31ம் தேதி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, குணசேகரனை தேடி வருகின்றனர்.

Advertisement