மாஜி கவுன்சிலர் மீது வழக்கு
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம் மற்றும் 5 ஊழியர்கள் கடந்த 7ம் தேதி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட தென்னஞ்சாலை ரோட்டில் கால்நடைத்துறை மதில் சுவரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றி கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் மற்றும் 4 பேர் கொண்ட கும்பல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டினர்.
இதுகுறித்து, உதவி பொறியாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில், முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் உள்ளிட்ட 5 பேர் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம்பிடித்த மகன்
-
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி டெண்டர்: ஐகோர்ட் இடைக்கால தடை
-
மவுண்ட் பார்க் பள்ளியில் 'ஸ்காலர்ஷிப்' தகுதி தேர்வு
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்விக் கட்டண சலுகைக்கு தேர்வு
-
பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிந்து தீ விபத்து சமையலர் உள்ளிட்ட 3 பேர் காயம்
-
கள்ளச்சாராய வழக்கில் மேலும் மூவர் கைது
Advertisement
Advertisement