மாணவிகள் பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது

புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதியை சேரந்த 13 வயது மாணவிகள் 2 பேர் கடந்த வாரம் திடீரென மாயமாகினர். இதுகுறித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகளை தேடினர். இதற்கிடையே மாணவிகள் அன்று இரவே வீட்டிற்கு திரும்பினர்.

அப்போது, அவர்கள் களைப்பாக இருந்ததால், போலீசார் அவர்களை அழைத்து சென்று தனியாக விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.

மாணவிகள் இருவரையும் குருசுக்குப்பம் மரவாடி தெருவை சேர்ந்த மீன் வியாபாரி புஷ்பராஜ், 25; வைத்திக்குப்பத்தை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் மணிமாறன், 27; ஆகியோர் காதலித்து வந்ததும், மாணவிகள் இருவருக்கும் வேண்டிய பொருட்களை வாங்கி கொடுத்து, தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

மேலும், 10க்கும் மேற்பட்டவர்கள் அந்த 2 மாணவிகளிடம் தனித்தனியாக காதலித்து, ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாணவிகள் இருவருக்கும், மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு, விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த புஷ்பராஜ், மணிமாறன் ஆகியோரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மாணவிகள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement