முதல்வர் ரூ.500 கோடி லஞ்சம் கவர்னரிடம் 'திடுக்' புகார்

பெங்களூரு: சுரங்க நிறுவனங்களிடம் இருந்து 500 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, முதல்வர் சித்தராமையா மீது கவர்னரிடம் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
பெங்களூரு, ராஜ்பவனில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, சமூக ஆர்வலர் ராமமூர்த்தி கவுடா என்பவர் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது கவர்னரிடம் அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் 2013 முதல் 2018 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதல்வராக இருந்தார். அப்போது, 8 கனிம சுரங்க நிறுவனங்களின் உரிமத்தை புதுப்பிக்கும் விவகாரத்தில், அந்த நிறுவனங்களிடம் இருந்து 500 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி உள்ளார்.
அந்த எட்டு நிறுவனங்களும், கனிம சுரங்க உரிமத்தை சரியாக புதுப்பிக்காமல் விட்டதால் அரசுக்கு 4,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. 2014ல் லோக் ஆயுக்தாவிடம் சித்தராமையா தாக்கல் செய்த சொத்து மதிப்பு மற்றும் 2015ல் தாக்கல் செய்த சொத்து மதிப்புக்கு இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
கடந்த 2023 தேர்தலின்போது அவரின் சொத்து மதிப்பு, பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு லஞ்சமாக பெற்ற பணம் தான் காரணம். 500 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து எழுத்துப்பூர்வமான புகாரையும், கவர்னரிடம் ராமமூர்த்தி கவுடா அளித்தார். அதை பெற்றுக் கொண்ட கவர்னர், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக ராமமூர்த்தியிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்
-
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம்பிடித்த மகன்
-
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி டெண்டர்: ஐகோர்ட் இடைக்கால தடை
-
மவுண்ட் பார்க் பள்ளியில் 'ஸ்காலர்ஷிப்' தகுதி தேர்வு
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்விக் கட்டண சலுகைக்கு தேர்வு
-
பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிந்து தீ விபத்து சமையலர் உள்ளிட்ட 3 பேர் காயம்
-
கள்ளச்சாராய வழக்கில் மேலும் மூவர் கைது