ரீல்ஸ் வீடியோவிற்காக நடுரோட்டில் சேட்டை; வாலிபரை கைது செய்தது பெங்களூரு போலீஸ்

பெங்களூரு: பெங்களூருவில் பரபரப்பான சாலையில் நடுரோட்டில், ரீல்ஸ் போடுவதற்கு நாற்காலியில் அமர்ந்து டீ குடிப்பது போல் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பிரபலமடைய வேண்டும் என்ற ஆசையில் ஒரு நபர், சாலையின் நடுவில் ஒரு நாற்காலியில் அமர்ந்து வாகனங்கள் அவரை கடந்து செல்லும் போது தேநீர் அருந்தினார்.
இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, விரைவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து, இந்த வினோதமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவரைக் கண்டுபிடித்தனர்.
பின்னர், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்ததற்காகவும், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட சாலைகளில் ஸ்டண்ட் செய்ததற்காகவும் அந்த நபரை வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
எச்சரித்த போலீஸ்!
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பெங்களூரு போலீசார் வெளியிட்டு, ''போக்கு வரத்திற்கு இடையூறு செய்வது மிகப்பெரிய அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும்'' என எச்சரித்துள்ளனர்.








மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்