உண்டியல் உடைத்து திருட்டு

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை பஸ் ஸ்டாண்ட் அருகே பிரசித்தி பெற்ற ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் மூன்று உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு உண்டியலை, நேற்று முன்தினம் மர்மநபர்கள் உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

கோவில் நிர்வாகம் அளித்த புகாரின்படி, இரணியல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement