ஐ.டி.ஐ., நிறுவனத்தின் அபூர்வ படம்

பெங்களூரு: கடந்த 1950ல் பெங்களூரின் இந்நியன் டெலிபோன் இண்டஸ்ட்ரியில் பணியாற்றிய பெண்களின் அபூர்வமான போட்டோ ஒன்று, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.

இது அந்த காலத்திலும், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினர் என்பதை காட்டுகிறது.

ஐ.டி.ஐ., எனும் இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், சுதந்திரத்துக்கு பின் அமைக்கப்பட்ட அரசு சார்ந்த முதல் தொழில் நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் அபூர்வமான போட்டோ சமூக வலைதளத்தில் வெளியாகி, வேகமாக பரவியுள்ளது.

இந்த அபூர்வமான கருப்பு, வெள்ளை படத்தை, 'இந்தியன் ஹிஸ்டரி பிக்ஸ்' என்ற எக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது.

பெங்களூரு ஐ.டி.ஐ., நிறுவனத்தில், 1950ல் எடுக்கப்பட்ட கருப்பு, வெள்ளை படமாகும்.

இதில் சேலை கட்டிய பெண்கள் தொலைபேசி உதிரி பாகங்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதை காணலாம். இந்த போட்டோ, இந்தியாவில் தொழில் வளர்ச்சியின் ஆரம்ப நாட்களை நினைவூட்டுகிறது.

அந்த காலத்திலும் பெண்கள் தொழில்நுட்பத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதே பெரும் சவாலாக இருந்த காலத்தில், அரசு தொழிற்சாலையில் பணியாற்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த 1948ல் துவக்கப்பட்ட ஐ.டி.ஐ., நிறுவனம், நாட்டில் தொலை தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பதில், முக்கிய பங்கு வகித்தது.

இந்தியாவின் தொலைத்தொடர்பு வசதிக்கு அஸ்திவாரம் போட்டது. இந்நிறுவனத்தின் அபூர்வமான படத்தை கண்டு, பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

Advertisement