ஆளில்லா ரயில்வே கேட்டில் ஹிந்தி, ஆங்கிலம் அழிப்பு

சிக்கமகளூரு: ஆளில்லா ரயில்வே கேட்டில் எழுதப்பட்டிருந்த ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிகள் அழிக்கப்பட்டன.

சிக்கமகளூரு மாவட்டத்தில் ஆளில்லா ரயில்வே கேட் உள்ள முருமனேஹள்ளி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் மட்டுமே எழுதப்பட்டு உள்ளன. கன்னட எழுத்துகளை காணவில்லை.

இதை அறிந்த கன்னட ஆர்வலர்கள் சிலர், கையில் கர்நாடகா கொடியுடன், கழுத்தில் துண்டுடன் வந்து, ரயில்வே கேட்டில் எழுதப்பட்ட ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு வார்த்தைகளை கருப்பு ஸ்பிரேயை பயன்படுத்தி அழித்தனர்.

அனைத்து போர்டுகளிலும் கன்னட எழுத்துகள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இச்சம்பவம் குறித்த வீடியோ, இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் போன்று ஹிந்தி வார்த்தைகள் அழிக்கப்படுவதாக சிலரும், போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனவும் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Advertisement