ஆஸ்திரியாவில் நிர்மலாவுக்கு வரவேற்பு

லண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டனில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று ஆஸ்திரியா நாட்டுக்கு சென்றார். அவரை, ஆஸ்திரியாவுக்கான இந்திய துாதர் சாம்பு எஸ் குமரன் வரவேற்றார்.

பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டின் தலைநகர் லண்டனில், பிரதமர் கீயர் ஸ்டார்மெர், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ், நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோரை சந்தித்து பேசினார். மேலும், 13வது பொருளாதார, நிதி பேச்சுவார்த்தையிலும் பங்கேற்றார்.

பின், ஐரோப்பாவின் ஆஸ்திரியா நாட்டிற்கு நேற்று சென்றார். அவரை அந்நாட்டின் தலைநகர் வியன்னாவில், இந்திய துாதர் சாம்பு எஸ் குமரன் வரவேற்றார். அந்நாட்டின் நிதியமைச்சர் மார்கஸ் மொர்டர்போயர் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். மேலும், ஆஸ்திரியாவின் பொருளாதாரம், எரிசக்தி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் வொல்ப்காங் ஹாட்மான்ஸ்போர்பர் மற்றும் முக்கிய அதிகாரிகளையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளார்.

Advertisement