இன்று இனிதாக

ஆன்மிகம்

பங்குனி உத்திரம்



பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி, நகரின் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பார்வதி - பரமசிவன் திருக்கல்யாணம் - மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

பால்குட ஊர்வலம் - காலை 10:00 மணி. இடம்: தங்கமலை திருசுப்பிரமணிய சுவாமி கோவில், தொட்டண்ணா நகர், காவல் பைரசந்திரா.

சுமங்கலி பூஜை - காலை 10:00 மணி; தீபாராதனை, மஹா மங்களாரத்தி - 12:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

விஸ்வரூப தரிசனம் - அதிகாலை 4:00 மணி; 5:00 மணி; விளா பூஜை - 5:00 மணி; தீர்த்தகாவடிகள், தீர்த்த அபிஷேகம் - 6:30 மணி; சந்தி பூஜை - 8:00 மணி; உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி; தீபாராதனை - மாலை 5:30 மணி; அர்த்த ஜாம பூஜை - இரவு 10:00 மணி. இடம்: ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம், பத்ரகிரி, சிக்கமகளூரு.

விநாயகர் மண்டபத்தில் இருந்து பன்னீர், சந்தன குடம் ஊர்வலம் - காலை 7:30 மணி; அபிஷேகம், மஹா மங்களாரத்தி - 10:00 மணி. இடம்: சிருங்ககிரி ஸ்ரீ சண்முக சுவாமி கோவில், ராஜராஜேஸ்வரி நகர்.

அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, ஸ்ரீ அய்யப்ப சுவாமி அவதிரித்த தினத்தை ஒட்டி சிறப்பு பூஜை, ஆராதனை - காலை 6:00 மணி; இறைவனடி சேர்ந்த அடியார்களுக்கு அஞ்சலி - பகல் 12:00 மணி; அன்னதானம் - 12:30 மணி; முருகனின் தேர் ஊர்வலம் - இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் - 10:30 மணி. இடம்: ஸ்ரீ அங்கலிங்கேஸ்வரர் கோவில், கவுதமபுரம்.

விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் - காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை; அபிஷேகம், மஹா மங்களாரத்தி - காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம், மரியப்பனபாளையம், பெங்களூரு.

சிறப்பு அபிஷேகம், மஹா மங்களாரத்தி - காலை 6:00 முதல் 8:00 மணி வரை; பால்குட ஊர்வலம் - 10:00 மணி; பால்குட அபிஷேகம், அன்னதானம் - பகல் 12:00 மணி; மஹா மங்களாரத்தி - மதியம் 1:00 மணி; சிறப்பு அலங்காரம், அர்ச்சனை - மாலை 5:00 மணி. இடம்: சுப்பிரமணிய சுவாமி கோவில், சிக்க பானஸ்வாடி.

லட்சார்ச்சனை



65ம் ஆண்டு லட்ச லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் சண்டி மஹா யாகம், கணபதி பூஜை, புண்யாஹவசனம், ஆராதனை - காலை 9:00 முதல் பகல் 12:00 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை; மஹா மங்களாரத்தி - மதியம் 12:00 மணி; பிரசாதம் வினியோகம் - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்ம்ன் கோவில், சிவாஜி நகர்.

ராமநவமி சங்கீத உத்சவம்



ஸ்ரீகலா கல்வி சார்பில் 32ம் ஆண்டு ஸ்ரீராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி, சாம்பவி பூஷனின் பாடல், ஸ்ரவ்யா அச்சந்தாவின் வயலின், ஸ்ரீகாராவின் மிருதங்கம் - மாலை 5:15 மணி; அபிஷேக் ரகுராமின் பாடல், ஸ்மதாவின் வயலின், ரவிசங்கரின் மிருதங்கம், அனுாரின் கஞ்சீரா - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீவாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.

ஸ்ரீராமாபியுத்யா சபா நல அறக்கட்ளை சார்பில் 135 வது ஸ்ரீராமோற்சவத்தை ஒட்டி, பஜனை மண்டலியின் ராம பஜனை - மாலை 5:00 முதல் 6:00 மணி வரை; ஜெயந்தின் புல்லாங்குழல், பாஸ்கரின் வயலின், கிஷோர் ரமேஷின் மிருதங்கம், குருபிரசன்னாவின் கஞ்சீரா - மாலை 6:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஆலம்மன பவன், ஸ்ரீராம்பேட், மைசூரு.

ஸ்ரீபிரசன்ன சீதாராமா கோவிலில், 109 வது ராமநவமியை ஒட்டி, கேரளாவின் நந்தினியின் பாடல், ஜோத்சனாவின் வயலின், சுதீந்திராவின் மிருதங்கம், ஸ்ரீநிதியின் கடம் - மாலை 6:30 மணி. இடம்: கோவில் வளாகம், நாராயண சாஸ்திரி சாலை, மைசூரு.

ஸ்ரீராம சேவா மண்டலி சார்பில் 72ம் ஆண்டு ராமோத்சவம், அர்ச்சனாவின் கிளாசிக் இசை கச்சேரி - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீஆவணி சங்கர மடம், நான்காவது பிரதான சாலை, வித்யாரண்யபுரம், மைசூரு.

ஸ்ரீசீதா ராமா கோவிலில் மேலுகோட்டே ரம்யாஸ்ரீயின் சாகசபோன் இசை நிகழ்ச்சி - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கோவில் வளாகம், சித்தார்த்தா நகர், மைசூரு.

108 கலச பால்குட அபிஷேகம், முருகருக்கு ராஜ முடி அலங்காரம் - காலை 9:30 மணி; அன்னதானம் - இரவு 8:00 மணி. இடம்: தண்டபாணி ஞான மந்திரா, 6 வது பிளாக், ராஜாஜிநகர்.

பால்குடம் ஊர்வலம், அபிஷேகம் - 7:00 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம், மோர் வழங்கல் - 9:00 மணி. இடம்: ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி அபிவிருத்தி சமிதி, டி.சி.எம்.ராயன் ரோடு, வேல்முருகபுரம்.

பொது

மஹா ஜனோத்சவம்



பூஜா பகவத் நினைவு மஹாஜனா கல்வி மையம் சார்பில் இன்று முதல் இரண்டு நாட்கள் கல்லுாரிகளுக்கு இடையேயான கலாசார திருவிழா. மேலும் விபரங்களுக்கு 63663 29062, 91644 44794 என்ற மொபைல் போனில் தெரிந்து கொள்ளலாம்.

நல்வாழ்வு சங்கமம் துவக்கம்



ஆயுஷ் டிவி சார்பில் நான்கு நாட்கள் நடக்கும், உலகளாவிய நல்வாழ்வு சங்கமம் - 2025 துவக்கம். இதன் ஒரு பகுதியாக மாம்பழ, பலாப்பழ கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: ஆறாவது நுழைவு வாயில், அரண்மனை மைதானம், பெங்களூரு.

பயிற்சி



ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

காமெடி



ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், ஆறாவது பிளாக், கோரமங்களா.

மிட்நைட் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

லேட் நைட் காமெடி ேஷா - இரவு 10:30 முதல் 11:45 மணி வரை. இடம்: ஸ்டார்பக்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

Advertisement