கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்புக்குழு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை

8

சென்னை; கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க தமிழக அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.



சென்னையில் உள்ள பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மாணவர் ஒருவர் பலியானார்.


இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனையை அளித்துள்ளது. அதாவது, கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க தமிழக அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.


பல்வேறு தலைவர்கள் படித்த புகழ்பெற்ற கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வேதனை தருகிறது. குற்றவாளிகள் பிறப்பது இல்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று நீதிமன்றம் கூறி உள்ளது.

Advertisement