இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் கருண் நாயருக்கு வாய்ப்பு?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில், கர்நாடகா பேட்ஸ்மேன் கருண் நாயருக்கு மீண்டும் இடம் கிடைக்குமா என்று, எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் கூட அடித்து ஆடி விடலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு மனதளவில் பொறுமை வேண்டும். களத்தில் அதிக நேரம் நிலைத்து நின்று 50 முதல் 60 ரன்கள் அடித்தாலே, பெரிய விஷயம். டெஸ்டில் சதம் அடிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் இந்திய அணிக்காக இளம் வயதில், டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்து சாதனை படைத்தவர் கருண் நாயர், 33.
சொந்த மாநிலம் கேரளா என்றாலும், கருண் நாயர் வளர்ந்தது, படித்தது எல்லாம் பெங்களூரில் தான். பள்ளி படிக்கும் போது இருந்தே கிரிக்கெட் விளையாடுகிறார். கடந்த 2013ல் ரஞ்சி போட்டியில் கர்நாடகா அணிக்காக அறிமுகம் ஆனார். சிறப்பாக விளையாடியதால் கடந்த 2016ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.
மூன்று சதங்கள்
முதல் போட்டியில் எதிர்பார்த்த அளவு ஜொலிக்கவில்லை. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு, சம்மட்டி அடி கொடுத்து முச்சதம் பதிவு செய்து அசத்தினார்.
பின், பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. கடைசியாக 2017 ல் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினார்.
அதற்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் போராடி வருகிறார். ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தாலும், இந்திய அணிக்கான அவரது கதவு இன்னும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் நடந்த ரஞ்சி டிராபி தொடரில், கருண் நாயர் தனது பேட்டிங்கில் முத்திரை பதித்தார்.
ஒன்பது போட்டிகளில் 863 ரன்கள் குவித்தார். சராசரி 54 ஆகும். நான்கு சதம், இரண்டு அரை சதம் அடித்து அசத்தினார். இதனால் அவரை மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்று பேச்சு எழுந்தது.
தற்போது நடந்து வரும் ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டி விளையாடுகிறது. இதற்கு முன்பாக இந்தியா ஏ அணி, இங்கிலாந்து சென்று இரண்டு டெஸ்டில் விளையாட உள்ளது.
இந்தியா ஏ அணியில் கருண் நாயர் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் போட்டி மே 30ம் தேதி ஸ்பிட்பயர், இரண்டாவது போட்டி ஜுன் 6ம் தேதி நார்தாம்டனில் நடக்கிறது. இந்த போட்டிகளில் அசத்தும் பட்சத்தில் கருண் நாயர் மீண்டும், இந்திய அணிக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது
- நமது நிருபர் -.
மேலும்
-
வேடசந்தூர் அருகே லாரி - கார் மோதல்: 3 பேர் பலி
-
நாடு முழுவதும் டோல்கேட்டில் செயற்கைக்கோள் மூலம் கட்டணம் வசூலா? மத்திய அரசு விளக்கம்
-
அமைதி ஒப்பந்த முயற்சியை கைவிடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை
-
கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்புக்குழு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை
-
கிரிக்கெட் வீரர்களிடமிருந்து வந்த பாலியல் தொல்லை: மாஜி கிரிக்கெட் வீரரின் மகள் அதிர்ச்சி தகவல்
-
2 ஆண்டில் குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்