பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா

தொண்டாமுத்துார்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஏப்., 2ம் தேதி பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் யாகசாலை பூஜைகளும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தன.
ஏப்., 8ம் தேதி, திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.
திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, காலையும், மாலையும் யாகசாலை பூஜையும், திருவீதியுலாவும் நடந்தது. நேற்று இரவு 10:30 மணிக்கு, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் ஆகியோர், மலர் மற்றும் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமான தெப்ப தேரில் எழுந்தருளி, கோவில் தெப்பக்குளத்தில், 11 சுற்றுகள் வந்தனர். அதன் தொடர்ச்சியாக, கோவிலை சுற்றி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
திருமணம் அன்றே குழந்தை பிறந்தால் வேறு விதமாக தான் இருக்கும்: தி.மு.க., எம்.பி., கல்யாணசுந்தரம் பேச்சு
-
வேடசந்தூர் அருகே லாரி - கார் மோதல்: 3 பேர் பலி
-
நாடு முழுவதும் டோல்கேட்டில் செயற்கைக்கோள் மூலம் கட்டணம் வசூலா? மத்திய அரசு விளக்கம்
-
அமைதி ஒப்பந்த முயற்சியை கைவிடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை
-
கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்புக்குழு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை
-
கிரிக்கெட் வீரர்களிடமிருந்து வந்த பாலியல் தொல்லை: மாஜி கிரிக்கெட் வீரரின் மகள் அதிர்ச்சி தகவல்