பளு துாக்குதலில் அசத்திய மாற்று திறனாளி பர்மன் பாஷா

பெங்களூரில் 1974ல் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் பர்மன் பாஷா. 1 வயது வரை மற்ற குழந்தைகள் போன்று தான் இருந்தார். அதன் பின், போலியால் இவரின் இரு கால்களும் பாதிக்கப்பட்டன.
ஆனாலும் படிப்பில் கெட்டிக்காரரான இவர், எலக்ட்ரானிக்ஸ், டெலிவிஷன் பொறியியல் டிப்ளமோ முடித்தார். தனது 23 வயது வரை பாரா ஒலிம்பிக் குறித்த இவருக்கு தெரியவில்லை. ஒரு நாள் இவரின் பக்கத்து வீட்டுக்காரர், ஒரு மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரரை, பர்மன் பாஷாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அன்று முதல், 'பாடி பில்டிங்' துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார். தினமும் கடும் உடற்பயிற்சி மேற்கொண்டார். 1997ல் தேசிய அளவிலான வீல்சேர் விளையாட்டு போட்டியில் பங்கேற்று, வெள்ளிப்பதக்கம் பெற்றார். இது அவருக்குள் இருந்த திறமையை வெளிப்படுத்தியது.
பாங்காக்கில், 1999ல் 'பார் ஈஸ்ட், சவுத் பசிபிக் கேம்ஸ் ஆப் டிசேபில்டு' போட்டியில் பங்கேற்பதற்காக, 1998ல் தேசிய அளவிலான பளு துாக்குதல் போட்டி நடந்தது. இதில், தங்கப்பதக்கம் பெற்று, புதிய சாதனையை நிகழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 2006ல் நடந்த காமன்பெல்த் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற பாஷா, 156.8 கிலோ எடையை துாக்கி, 10வது இடத்தை பிடித்தார். இவரின் திறமையை பாராட்டி, 2008 ல் மத்திய அரசு, அர்ஜுனா விருதும்; 2010ல் கர்நாடக அரசு ஏகலைவா விருதும் வழங்கியது.
இதுவரை பாரா ஒலிம்பிக்கில், 2004ல் 10வது இடம்; 2008ல் 4வது இடம்; 2012ல் 5வது இடம்; 2016ல் 4வது இடமும் பிடித்தார்.
இதுகுறித்து, பர்மன் பாஷா கூறியதாவது:
போட்டிகளில் பங்கேற்பது என்பது விஷயமல்ல. இதற்கான பயண செலவு உட்பட செலவுகளுக்காக, 'ஸ்பான்சர்'களை கண்டுபிடிப்பது தான் சிரமமாக இருந்தது. இப்போது அப்படியல்ல; பலரும் தாமாக முன்வந்து நன்கொடை வழங்குகின்றனர்.
பல ஆண்டுகளாக என் மனைவியின் வருமானத்தை நம்பியே இருந்தேன். அதன் பின், பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் பளு துாக்குதல் வீரர்களுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டேன். மத்திய, மாநில அரசுகளும், ஒலிம்பிக் வீரர்களுக்கு இணையாக, பாரா ஒலிம்பிக் வீரர்களையும் சமமாக பார்க்க துவங்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
மேலும்
-
திருமணம் அன்றே குழந்தை பிறந்தால் வேறு விதமாக தான் இருக்கும்: தி.மு.க., எம்.பி., கல்யாணசுந்தரம் பேச்சு
-
வேடசந்தூர் அருகே லாரி - கார் மோதல்: 3 பேர் பலி
-
நாடு முழுவதும் டோல்கேட்டில் செயற்கைக்கோள் மூலம் கட்டணம் வசூலா? மத்திய அரசு விளக்கம்
-
அமைதி ஒப்பந்த முயற்சியை கைவிடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை
-
கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்புக்குழு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை
-
கிரிக்கெட் வீரர்களிடமிருந்து வந்த பாலியல் தொல்லை: மாஜி கிரிக்கெட் வீரரின் மகள் அதிர்ச்சி தகவல்