இந்திய ஜோடி ஏமாற்றம்: ஆசிய பாட்மின்டன் காலிறுதியில்

நிங்போ: பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் காலிறுதியில் இந்தியாவின் தனிஷா, துருவ் ஜோடி தோல்வியடைந்தது.

சீனாவில், பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் 42வது சீசன் நடக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ, துருவ் கபிலா ஜோடி, ஹாங்காங்கின் சுன் மன் டாங், யிங் சூட் டிசே ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 20-22 என போராடி இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 13-21 எனக் கோட்டைவிட்டது.
மொத்தம் 41 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய தனிஷா, துருவ் ஜோடி 20-22, 13-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களில் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே சிந்து, பிரியான்ஷு உள்ளிட்டோர் தோல்வியடைந்து வெளியேறினர்.

Advertisement