வீடு ஒதுக்கீடு ஆணை : அமைச்சர் வழங்கல்

கடலுார்: செம்மண்டலம் அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

கடலுார், செம்மண்டலம் அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலையில் வழங்கினார்.

பின், அமைச்சர் கூறுகையில், 'அனைவருக்கும் வீடு என்பதன் அடிப்படையில் வீட்டு மனைப்பட்டா இல்லாதவர்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அனைவருக்கும் வீடு திட்டம் வாயிலாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் கடலுார் மாவட்டத்தில் கடலுார் மாநகராட்சி பனங்காட்டுகாலனி திட்டப்பகுதி -1 மற்றும் 2ல் 336 குடியிருப்புகள், செம்மண்டலம் திட்டப்பகுதியில் 272 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது' என்றார்.

மாநகர துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாநகர கமிஷனர் அனு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர் பாலமுரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement