--மாயூரநாத சுவாமி கோயில் திருக்கல்யாணம்
ராஜபாளையம், : ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதி முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
மாயூரநாத சுவாமி கோயிலில் வள்ளி, முருகன், தெய்வானை சுவாமிகளுக்கு மாலை 6:30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. மூலவருக்கு அபிஷேகங்களுடன் யாக பூஜை நடந்தது.
மணமகன் மணமகள் அழைப்புக்கு பின் அம்மன் சுவாமிக்கு மாலை மாற்றப்பட்டு கன்னிகாதானம் செய்யப்பட்டது.
வேத விற்பன்னர்கள் மந்திரம் உள்ளக திருக்கல்யாணம் நடந்தது.
மகா தீபாராதனை காட்டப்பட்டு அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேஷ், தக்கார் சர்க்கரையம்மாள் முன்னிலையில் பக்தர்கள் செய்தனர்.
ராஜபாளையம் சஞ்சீவி மலை முருகன், அம்பல புலி பஜார் சுப்பிரமணியர் கோயில், மழை முந்தல் விநாயகர் கோயில், சொக்கர் கோயில், சேத்தூர் திருக்கண்ணீஸ்வரர் கோயில், தேவதானம் நச்சாடை தவிர்த்து அருளிய நாதர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வழிபாடு நடந்தது.
மேலும்
-
வகுப்பறையில் மாணவனை தாக்கிய கல்லுாரி விரிவுரையாளர் சஸ்பெண்ட்
-
பஞ்சாபில் 14 தாக்குதல்கள் நடத்திய பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
-
தரங்கம்பாடியில் உலக மரபு தின விழா
-
அமெரிக்க விசா ரத்து நடவடிக்கையில் 50 சதவீதம் இந்திய மாணவர்கள்
-
மத்திய அமைச்சரவை மாற்றம் விரைவில்?: பா.ஜ.,வுக்கும் புதிய தலைவர்
-
வீட்டில் கஞ்சா செடி : மத்திய அரசு அதிகாரி கைது