தடுப்பு இல்லாத சிறுபாலத்தால் வாலாஜாபாதில் விபத்து அபாயம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில் போஜக்காரத் தெரு உள்ளது. இந்த தெருவில் இருந்து, குறுக்குத் தெரு உள்ளது. இத்தெருவின் இணைப்பு பகுதியில், கழிவுநீர் கால்வாய் இணைப்பாக அயோத்திதாச பண்டிதர் நிதியின் கீழ், சமீபத்தில் சிறுபாலம் கட்டுமானப் பணி நடைபெற்றது.

இந்த சிறுபாலத்தின் இருபுறமும் இதுவரை தடுப்பு ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், இச்சாலை வழியாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, சிறுபாலத்திற்கு தடுப்பு சுவர் வசதி ஏற்படுத்த அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement