மருத்துவமனை குழந்தைகள் வார்டு நுழைவாயிலில் பெயர்ந்த கான்கிரீட்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தை பேறு, கண், காது, மூக்கு, பல், பால்வினை, காசநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு பல்வேறு கட்டடங்களில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் மட்டுமின்றி மாவட்டத்தை ஒட்டியுள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என, தினமும், 3,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகளுக்கான உள்நோயாளி பகுதி வார்டு எண்.36ல் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தின் நுழைவாயில் வாசற்படியின் மேல்பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால், வாசற்படிக்கும் மேல்புற சுவருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது.
மேலும், அருகில் உள்ள போர்டிகோ கூரையிலும் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், சிகிச்சைக்காக குழந்தைகளை அழைத்து செல்வோர், போர்டிகோவில் உதிர்ந்த நிலையில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து, யார் தலையில் விழுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, குழந்தைகள் உள்நோயாளிகளுக்கான வார்டு கட்டடத்தின் வாசற்கதவின் மேல் பகுதியில் கானகிரீட் பெயர்ந்து விழுந்த பகுதியையையும், போர்டிகோவில் உதிர்ந்து விழும் நிலையில் உள்ள கான்கிரீட்டை அகற்றி போர்டிகோவை முழுமையாக சீரமைக்க, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
ஜல்லிக்கட்டு காளை முட்டி பார்வையாளர் பரிதாப பலி
-
ரயில்களில் கூடுதல் சுமைகளுக்கு கட்டணம்; தெற்கு ரயில்வே புது அறிவிப்பு
-
டிரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: சீமான் 'கலகல'
-
ராஜஸ்தானில் சோகம்; கார்- லாரி மோதியதில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
-
அ.தி.மு.க., கூட்டணியின் வெளியே தெரியாத ரகசியம் ! ராஜ்யசபாவில் பெரும் பலம் பெற பா.ஜ., வியூகம்
-
கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டம்' ஏழு பேர் கைது; ரூ. 1.09 கோடி, கார் பறிமுதல்