கீழ்கதிர்பூர் சாலையோரம் இடையூறான செடிகள் அகற்றம்

மேட்டுகுப்பம்:காஞ்சிபுரம் மேட்டுகுப்பத்தில் இருந்து, பெரும்பாக்கம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக, கீழ்கதிர்பூர், மேல்கதிர்பூர், மேல்ஒட்டிவாக்கம், முத்துவேடு உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலை, கடந்த ஆண்டு சாலையின் அகலம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கீழ்கதிர்பூர் பட்டியலினர்த்தவர்கள் குடியிருப்பு அருகில், சாலையோரம் வளர்ந்திருந்த சீமை கருவேலம் உள்ளிட்ட பல்வேறு முட்செடிகள் சாலை பக்கம் நீண்டு வளர்ந்து இருந்தன.
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த செடிகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை சார்பில், கீழ்கதிர்பூரில் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த முட்செடிகள் பொக்லைன் இயந்திரம் வாயிலாக நேற்று அகற்றப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜல்லிக்கட்டு காளை முட்டி பார்வையாளர் பரிதாப பலி
-
ரயில்களில் கூடுதல் சுமைகளுக்கு கட்டணம்; தெற்கு ரயில்வே புது அறிவிப்பு
-
டிரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: சீமான் 'கலகல'
-
ராஜஸ்தானில் சோகம்; கார்- லாரி மோதியதில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
-
அ.தி.மு.க., கூட்டணியின் வெளியே தெரியாத ரகசியம் ! ராஜ்யசபாவில் பெரும் பலம் பெற பா.ஜ., வியூகம்
-
கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டம்' ஏழு பேர் கைது; ரூ. 1.09 கோடி, கார் பறிமுதல்
Advertisement
Advertisement