திருவடிசூலம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

மறைமலை நகர்:திருவடிசூலம் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குண்ணவாக்கம்- திருவடிசூலம் சாலை 3 கி. மீ., துாரம் உள்ளது.

திருவடிசூலம், ஈச்சங்கரணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சாலையின் இருபுறமும் காப்புகாடுகள் உள்ள பகுதியில் சாலை குறுகலாகவும், பள்ளங்களும் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது.

சாலையை சீரமைக்க அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement