எத்தனை ஊழல் புகார் வந்தாலும்... செல்வப்பெருந்தகைக்கு 'ஜாக்பாட்'

16


சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் டில்லி வந்து சீனியர்களை சந்தித்து, செல்வப்பெருந்தகைக்கு எதிராக ஊழல் புகார்களை சமர்ப்பித்தனர். தமிழக காங்., தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என, மல்லிகார்ஜுன கார்கேவிடம் வற்புறுத்தினர்.


கார்கேயும், இது குறித்து ராகுலிடம் பேசினாராம். ஆனால் ராகுலோ, 'செல்வப்பெருந்தகை தமிழகத்தில் கட்சியை நன்றாக வளர்த்து வருகிறார்' என கூறி விட்டாராம்.


'தமிழகத்தில் அடுத்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கப்போகிறது. அப்படி ஆட்சி அமைந்தால், அதில் காங்கிரசுக்கு பங்கு உண்டு' என, தி.மு.க., தலைவர் கூறியதாக, ராகுலிடம் தெரிவித்தாராம் பெருந்தகை.

இதையடுத்து, 'எத்தனை ஊழல் புகார்கள் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். செல்வப்பெருந்தகைதான் தமிழக காங்., தலைவர்' என, கார்கேவிடம் உறுதியாக சொல்லிவிட்டாராம் ராகுல். தமிழகத்தில், 60 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியில் காங்கிரஸ் இடம் பிடிக்கப் போகிறது என பெருந்தகை கூறியது, ராகுலை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

Advertisement