பா.ம.க., தலைவராக தொடர்வேன்: அன்புமணி

சென்னை: 'பா.ம.க., தலைவராக தொடர்ந்து செயல்படுவேன்' என, அன்புமணி தெரிவித்துள்ளார்.
பா.ம.க.,வினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
கட்சி கொள்கை விதிகளின்படி, பா.ம.க., தலைவரை, பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும்.
அதன் அடிப்படையில், 2022 மே 28ல் சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் வாழ்த்துகளுடனும் தொண்டர்களின் ஆதரவுடனும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது.
எனவே, பா.ம.க., தலைவராக தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, அந்த நோக்கத்தை நோக்கி, உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க உறுதி பூண்டிருக்கிறேன்.
மாமல்லபுரம் மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து வருகிறேன். வரும் சட்டசபை தேர்தலைப் பொறுத்தவரை, தொண்டர்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை, ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது, என் பெரும் கடமை. அந்தக் கடமையை, சரியான நேரத்தில் செய்து முடிப்போம்.
அரசியல் களத்தில் ராமதாஸ் லட்சியங்களை வென்றெடுக்க, தொண்டர்களை விரைவில் சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



மேலும்
-
மும்பை அணி 'திரில்' வெற்றி: டில்லி அணிக்கு முதல் தோல்வி
-
நுாறாவது அரைசதம் விளாசினார் கோலி: பெங்களூரு அணி வெற்றி
-
எழுச்சி பெறுமா சென்னை அணி: லக்னோ அணியுடன் மோதல்
-
கோப்பை வென்றார் அல்காரஸ்: மான்டி கார்லோ டென்னிசில்
-
ஜெர்மனி நீச்சல் வீரர் சாதனை: 'பிரீஸ்டைல்' 400 மீ., போட்டியில்
-
வில்வித்தை: ஜோதி-ரிஷாப் 'தங்கம்'