சுட்டெரிக்கும் கோடை வெயில் வறண்டு வரும் நீர்நிலைகள்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திலுள்ள 42 ஊராட்சிகளுக்கு உட்பட்டு 60க்கும் மேற்பட்ட ஏரிகள், 100க்கும் மேற்பட்ட குட்டை, குளங்கள் உள்ளன. இப்பகுதியின் முக்கிய நீராதாரமாக இந்த நீர்நிலைகள் உள்ளன. இதன் வாயிலாக கிராம கால்நடைகளுக்கு தேவையான குடிநீரும் கிடைக்கும்.
கடந்தாண்டு பருவமழை கைகொடுத்தது. இதையடுத்து, ஒன்றியத்தில் உள்ள நீர்நிலைகள் 99 சதவீதம் நிரம்பின. இதை தொடர்ந்து, இந்தாண்டு கோடை சீசனை சமாளிக்கலாம் என, விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், கோடை வெயில் முன்னதாகவே துவங்கியதுடன், வறட்சியான காற்றும் வீசி வருவதால், ஏரி, குளங்களில் நீர் வேகமாக வற்றி வருகிறது. நேற்று 37 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்ப நிலையுடன் வறண்ட காற்றும் வீசியது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
ஏரி, குளங்களில் தண்ணீர் வற்றி, நிலத்தடி நீர் மட்டமும் சரிய துவங்கியுள்ளது. கிராமங்களின் குடிநீர் தேவைக்கு பயன்படும் போர்வெல்களிலும் வரத்து குறைந்து விடும்.
பருவமழை சீசன் துவங்கும் வரை, நிலைமையை சமாளிப்பது மிகவும் கடினம். வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கால்நடைகளுக்கென கட்டப்பட்ட தொட்டிகளில், ஊராட்சி நிர்வாகம் வாயிலாக கோடைக்காலத்தில் நீர் நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
பா.ம.க.,-தே.மு.தி.க.,வுடன் கூட்டணியா? முயற்சி செய்வோம் என நயினார் நாகேந்திரன் பதில்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை டிஸ்மிஸ் செய்யணும்: ஜீயர் சுவாமிகள்
-
கோவையில் 4 ஆட்டோ, 47 பைக் பறிமுதல்; திருடி பதுக்கி வைத்தது அம்பலம்!
-
ஹிந்து குறித்து அவதூறு பேசினால் தண்டனை; அமெரிக்காவில் முதன் முறையாக புது சட்டம்
-
ஜல்லிக்கட்டு காளை முட்டி பார்வையாளர் பரிதாப பலி
-
தி.மு.க., ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்: நம்பிக்கையுடன் காலணி அணிந்த அண்ணாமலை