செயல் அலுவலர் மீது கோபம் சுவாமி வாகனத்திற்கு தீவைப்பு
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் இரவு பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. அப்போது, கோவில் மூலஸ்தானம், பின்புற அறையில் இருந்த மர ரிஷப வாகனம் தீயில் எரிந்தது. இது தொடர்பாக டி.எஸ்.பி., ராஜா தலைமையில் போலீசார், கண்ணன், 58, என்பவரை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் கண்ணன், கோவிலுக்கு பல்வேறு திருப்பணிகளை சொந்த செலவில் செய்து வந்துள்ளார்.
புதிதாக பொறுப்பேற்ற செயல் அலுவலர் ராஜேஷ், தனி நபர்கள் சார்பில் எந்த பணியும் செய்யக்கூடாது என்றதுடன், கண்ணன் சார்பில் கோவிலில் வைத்திருந்த பீரோ, இதர பொருட்களை உடனே காலி செய்யுமாறு நிர்பந்தித்துள்ளார்.
இதனால் செயல் அலுவலர் மீது கோபமடைந்து, மர ரிஷப வாகனத்திற்கு தீ வைத்ததை கண்ணன் ஒப்புக்கொண்டார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
மேலும்
-
என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க., கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்
-
தேர்தலில் தி.மு.க., - த.வெ.க., இடையே போட்டி என்பது சிறந்த நகைச்சுவை!
-
ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 8 பேர் பலி
-
நக்சலிசம் முழுவதுமாக முடிவுக்கு வரும்: நம்பிக்கையுடன் கூறுகிறார் சத்தீஸ்கர் துணை முதல்வர்
-
3 நாட்கள் விடுமுறை; 3.32 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம்
-
அரசியல்வாதி வீட்டில் வேலை செய்பவருக்கு அரசு சம்பளம்: அரசு மருத்துவர் கொந்தளிப்பு