பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் : பரமக்குடி மினி விளையாட்டு அரங்கத்தில்விளையாட்டு மேம்பாட்டுஆணையம் சார்பில் ஸ்டார் அகாடமி பளு துாக்குதல் விளையாட்டுபயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
இங்கு தலா 20 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சேர்க்கப்படஉள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்தில் 25 நாட்கள் தொடர் பயிற்சிஅளிப்பதோடு சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள், விளையாட்டுசீருடை வழங்கப்படும். பயிற்றுநராக பயிற்சி அளிக்க பளு துாக்குதல் விளையாட்டில் தேசிய விளையாட்டு நிறுவனம் வழங்கிமுதுநிலை விளையாட்டு பயிற்சி சான்றிதழ் அல்லது ஒரு வருட டிப்ளமோ/சான்றிதழ் பயிற்சிஅல்லது தமிழ்நாடு உடற்கல்வி பல்கலை முதுநிலை டிப்ளமோ(விளையாட்டு) அல்லது சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால்நடத்தப்பட்ட உரிமம் படிப்பு இருத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு மாதாந்திர சம்பளம் ரூ.25,000 வழங்கப்படும். வயது 50க்குள் இருக்க வேண்டும். இதற்குரிய விண்ணப்பத்தை ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். ஏப்.,20 மாலை 5.00 மணிவரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
பரமக்குடி மினி விளையாட்டுஅரங்கில் பயிற்சியாளர் நேர்முகத்தேர்வு ஏப்., 24ல் காலை 7:00 மணிக்கும்,பயிற்சிபெறும் வீரர், வீராங்கனைகள் தேர்வு ஏப்., 28ல் காலை 7:00 மணிக்குநடைபெறும் என கலெக்டர் சிம்ரன் ஜீத் காலோன் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
வக்ப் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் வழக்கு
-
உடனடியாக வெளியேறுங்கள்: சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
-
அம்பேத்கர் இறுதி சடங்கு; காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
-
வடக்கு உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்; 30க்கும் மேற்பட்டோர் பேர் பலி
-
சால்ட் அதிரடி; இலக்கை நோக்கி முன்னேறும் பெங்களூரு
-
இந்தியா உள்ளிட்ட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கம்; மக்கள் அச்சம்