தாத்தாவை தாக்கிய பேரன் கைது
திருக்கோவிலுார் : அரகண்டநல்லூர் அருகே, 85 வயது முதியவரை தாக்கிய பேரனை போலீசார் கைது செய்தனர்.
அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டியை சேர்ந்தவர் தண்டபாணி, 85; இவருக்கு மணி மற்றும் பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சொத்து சம்பந்தமாக இவர்களுக்குள் பிரச்னை உள்ளது. இந்நிலையில், பாண்டியன் அவரது மகன் செந்தில்குமார், 21; ஆகிய இருவரும் சொத்தில் பங்கு கேட்டு, கடந்த மார்ச்., 31ம் தேதி தண்டபாணியை தாக்கினர். இதில் காயமடைந்தவர், திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்த புகாரின் பேரில், அரகண்டநல்லூர் போலீசார், செந்தில்குமாரை கைது செய்தனர். மேலும் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐ.டி., ஊழியர்களை குறிவைத்து சைபர் குற்றங்கள் அதிகரிப்பு
-
ஒல்லியானவங்க வெளியே வராதீங்க சூறாவளியால் சீன அரசு அதிரடி
-
கர்நாடகா 'அல்போன்சா' கிலோ ரூ.130!
-
ஜெருசலேம் கல்லுாரி பட்டமளிப்பு விழா
-
மா.அரங்கநாதன் இலக்கிய விருது தமிழவன், திருநாவுக்கரசு தேர்வு
-
புழுதிவாக்கத்தில் பாதாள சாக்கடை அடைப்பு நிலத்தடி நீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம்
Advertisement
Advertisement