ஜோகிமட்டி மலையில் தடை

சித்ரதுர்கா, : சித்ரதுர்காவின் ஜோகிமட்டி மலைப்பகுதி, மிகவும் பிரசித்தி பெற்றது. ஜோகிமட்டி மலைப்பகுதி, 20,000 ஏக்கரில் விரிவடைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் உள்ளது.

ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் பகுதிகளில் ஒன்றாகும். எனவே இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இந்த மலைப்பகுதி, சித்ரதுர்காவின் ஊட்டி என, அழைக்கப்படுகிறது.

தற்போது கோடை என்பதால், மலையின் வனப்பகுதி உலர்ந்துள்ளது. மரங்கள், செடி கொடிகள் கருகி உள்ளன. தீ விபத்துகள் நடக்கும் அபாயம் அதிகம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுலா பயணியர், வன விலங்குகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு, ஜூன் மாதம் வரை சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சிக்கும் அனுமதி இல்லை.

Advertisement