மனைவியின் குழந்தையை கொன்ற வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் சிறை
பெலகாவி : சிக்கோடியில் 5 வயது மகனை கொன்ற வளர்ப்பு தந்தைக்கு, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
பெலகாவி மாவட்டம், சிக்கோடியை சேர்ந்தவர்கள் அசோக் பகதி, லட்சுமி தம்பதி. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவகாரத்து பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, யந்திரவா கிராமத்தைச் சேர்ந்த பரசுராம் ஸ்ரீகாந்த் ஜாதவ் என்பவரை லட்சுமி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்கு பிறந்த 5 வயது மகன் மகேசை, தன்னுடன் வளர்த்து வந்தார்.
கடந்த 2019 மே 4ம் தேதி மனைவி லட்சுமி வெளியே சென்றிருந்தபோது, 5 வயது மகன் மகேஷ் வளர்ந்த பின், தன் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமே என்று எண்ணிய பரசுராம் ஸ்ரீகாந்த் ஜாதவ், குழந்தையை பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் குழந்தை சுருண்டு விழுந்து இறந்தது.
வெளியே சென்றிருந்த மனைவி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மகன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவ்விஷயத்தை வெளியே சொன்னால், கொன்று விடுவதாக பரசுராம் ஸ்ரீகாந்த் மிரட்டியுள்ளார். இதனால் அவரும் வெளியே சொல்லாமல், உடல் நலம் பாதித்து குழந்தை இறந்ததாக தெரிவித்தார்.
இவ்விஷயம் அறிந்த முதல் கணவர், ராய்பாக் போலீசில், பரசுராம் மீது புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு, சிக்கோடி ஏழாவது கூடுதல், செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பரசுராம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனையும், 1 லட்சத்து 10,000 ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பளித்தது.
மேலும்
-
இறுதிக்கட்டத்தில் ராயபுரம் மாட்டு கொட்டகை பணி
-
திருவான்மியூர் - உத்தண்டி வரை ஆறுவழி சாலை திறப்பு ஓரிரு மாதங்களில்: 14 கி.மீ.,க்கு நான்குவழி மேம்பாலமும் அமைக்க திட்டம்
-
இணைப்பு சக்கரம் பொருத்திய பைக் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கல்
-
பேக்கரி கடை பூட்டை உடைத்து திருடியவர் கைது
-
கூவத்தில் படர்ந்த ஆகாய தாமரை கொசு தொல்லை அதிகரிப்பு
-
வளசரவாக்கத்தில் சாலை பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி