திருமூர்த்திமலையில் சுற்றுலா பயணியர் குஷி

உடுமலை : கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல், மூலிகை குணங்களுடன் கூடிய குளிர்ந்த நீர் விழும் அருவி, மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை என சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது.

கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், அருவியிலும் நீர் வரத்தும் இருப்பதால், சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், கோடை சீசன் களைகட்டியுள்ளது.

Advertisement