எனக்கு சொந்தமாக மூளை உள்ளது: கூட்டணி குறித்து கேள்விக்கு சீமான் 'சுளீர்'

26

சென்னை: ''எனக்கு சொந்தமாக மூளை இருக்கிறது. சிந்திக்கும் ஆற்றல் இருக்கிறது'' என கூட்டணி குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார்.


நிருபர்: பா.ஜ.,உடன் நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு போகும் என சொல்லப்படுகிறதே?



சீமான்: நீங்கள் ஏன் என்னை பிடித்து தள்ளுகிறீர்கள். எனக்கு யாரும் வழிகாட்டவோ, அறிவுறுத்தவோ அவசியம் இல்லை. எனக்கு சொந்தமாக மூளை இருக்கிறது. சிந்திக்கும் ஆற்றல் இருக்கிறது.


நான் என்ன நினைக்கிறனோ, அதை தான் செய்வேன். திரும்ப திரும்ப கேள்வி எழுப்பதை வெறுக்கிறேன். நான் தனித்து தான் போட்டியிடுவேன். திரும்ப திரும்ப அதை சொல்ல முடியாது. வேற கேள்வி கேளுங்கள்.


நிருபர்: தனித்து போட்டியிடுவது யாருக்கும் சாதகமாக அமைந்து விடாதா?



சீமான்: இன்றைக்கு இருக்கும் திராவிட அதிகாரம் மிக கொடுமையானதாக இருக்கிறது. அவர் ஓட்டை இவர் பிரிப்பார் என்றால் நீங்கள் வலுவிழந்து இருக்கிறீர்களா? ஊழலை யாருடன் சேர்ந்து ஒழிக்கலாம்.


என்னையும் கொண்டு போய் அந்த சாக்கடையில் தள்ளுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள்.. தற்காலிக வெற்றிக்காக நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை. என் கால்களை நம்பித்தான் என் பயணம்.



நிருபர்: தற்போதைய பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?



சீமான்: அவர்கள் ஒரு கட்சி. நாட்டில் பல மாநிலங்களில் அதிகாரத்தில் இருக்கும் கட்சி. அவர்கள் கட்சி, எது நல்லது என்பது குறித்து அவர்கள் தான் முடிவு செய்வார்கள். நாம் கருத்து சொல்ல முடியாது. புதிய தலைவராக பதவியேற்றவருக்கு வாழ்த்து சொல்ல முடியும். வாழ்த்துக்கள்.

Advertisement