ராஜஸ்தானில் சோகம்; கார்- லாரி மோதியதில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

2


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கார்- லாரி மோதி விபத்து ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கார்- லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த நெடுஞ்சாலையில் நீண்ட நெரிசல் ஏற்பட்டது.



விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடல்களை கைப்பற்றி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள்.


ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement