இந்திய மாணவர்களை நிராகரிக்கும் ஆஸி., பல்கலைகள்!

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாக்களை தவறாக பயன்படுத்துவதாக கூறி, இந்தியாவின் 5 மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மேற்படிப்புகளை படிக்க அதிகம் விரும்புகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் படிப்பதற்கு ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆஸி., வரும் மாணவர்களுக்கு விசா வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், விசா பெற்று வருவோர், அதை தவறான வழிகளில் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.
இதனையடுத்து மாணவர் விசா வழங்குவதற்கான நடைமுறைகளை ஆஸ்திரேலிய அரசு கடுமையாக்கி வருகிறது. மாணவர்களுக்கான விசா எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
5 மாநிலங்கள் என்ன?
அந்த வகையில், குஜராத், பீஹார், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய 5 மாநில மாணவர்கள் ஆஸி., வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் பரவி வருகின்றன.
டிசம்பர் 2022ம் ஆண்டு முதல் டிசம்பர் 2023ம் ஆண்டு வரை இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களில் 48 சதவீதம் மட்டுமே ஏற்கப்பட்டன.
நிராகரிப்பு
தற்போது விசா கோரும் இந்திய மாணவர் விண்ணப்பங்களில் 20 சதவீதம் வரை ஏதாவது காரணம் சொல்லி நிராகரிக்கப் படுகின்றன. இதில், குறிப்பிட்ட மாநில மாணவர்களின் விண்ணப்பங்களை ஏற்பதே இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் 2022ல் சேர்ந்த பஞ்சாப், ஹரியானா, குஜராத் மாணவர்களில் பெரும்பகுதியினர், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதால், அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களைச் சேர்க்க கூடாது என அந்நாட்டு அரசு 2023ம் ஆண்டிலேயே அறிவுறுத்தல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.













மேலும்
-
சாஹல் சிறப்பான பந்துவீச்சு: பஞ்சாப் அணி த்ரில் வெற்றி
-
சிறுபான்மையினர் நலன் குறித்த உங்கள் வரலாற்றை பாருங்கள்: பாக்.,கிற்கு இந்தியா கண்டனம்
-
கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா கடிதம்: பெண் ஊழியரின் செயல் இணையத்தில் வைரல்
-
ராபர்ட் வாத்ராவிடம் 6 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை: நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு
-
ரோகித் சர்மாவுக்கு கவுரவம்
-
ரசிகர்கள் மீது பட்டாசு வீச்சு * பெங்களூரு கால்பந்து அணி புகார்