ஸ்குவாஷ்: ரமித் தோல்வி

எல் கவுனா: எகிப்தில் எல் கவுனா சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரமித் டான்டன், தற்போதைய ஜூனியர் உலக சாம்பியன், எகிப்தின் ஜகாரியா முகமதுவை சந்தித்தார்.
முதல் செட்டை ரமித் டான்டன் 7-11 என இழந்தார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டையும் 7-11 என கோட்டை விட்டார் ரமித் டான்டன். மூன்றாவது செட்டை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த இவர், இம்முறை 3-11 என எளிதாக நழுவவிட்டார்.
முடிவில் ரமித் டான்டன், 0-3 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement