இந்திய அணிக்கு வெள்ளி * உலக கோப்பை வில்வித்தையில்...

புளோரிடா: உலக கோப்பை வில்வித்தையில் இந்தியா நான்கு பதக்கம் கைப்பற்றியது.
அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் 1') தொடர் நடந்தது. ஆண்கள் அணிகளுக்கான 'ரிகர்வ்' பிரிவு பைனலில் இந்தியாவின் அடானு தாஸ், திராஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய் இடம் பெற்ற அணி, சீனாவுடன் மோதியது.
முதல் செட் 54-54 என சமன் ஆனது. அடுத்த செட்டை சீனா 58-55 என கைப்பற்றியது. மூன்றாவது செட்டில் சற்று தடுமாறிய இந்திய அணி 54-55 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய அணி 1-5 என்ற (54-54, 55-58, 54-55) கணக்கில் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.
திராஜ் வெண்கலம்
தனிநபர் ஆண்களுக்கான ரிகர்வ் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் திராஜ் பொம்மதேவரா, ஜெர்மனியின் புளோரியன் அன்ரக் மோதினர். இதில் திராஜ் 1-7 என தோல்வியடைந்தார்.
இதையடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் திராஜ், ஸ்பெயினின் ஆன்ட்ரியஸ் மெடியலை எதிர்கொண்டார். முதல் மூன்று செட் முடிவில் திராஜ் 2-4 என பின்தங்கினார். அடுத்த இரு செட்டில் அசத்திய இவர், 6-4 என வெற்றி பெற்ற, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
இத்தொடரில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கம் வென்றது.
மேலும்
-
அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கான ரூ.18,500 கோடி நிதியுதவி நிறுத்தம்
-
ராகுல் - தேஜஸ்வி கூட்டணி பேச்சு
-
'முடா' வழக்கில் சித்தராமையாவுக்கு சிக்கல்! 'குற்றமற்றவர்' அறிக்கையை ஏற்காத சிறப்பு நீதிமன்றம்
-
70 வயது மூதாட்டியை கொன்று உடல் மீது நடனமாடி வீடியோ எடுத்த சிறுவன் கைது
-
டிஜிட்டல் கைது மோசடி; ரூ.7.6 கோடி சுருட்டிய 4 பேர் சிக்கினர்
-
மேற்கு வங்க கலவரத்தில் வங்கதேசத்தவருக்கு பங்கு? கண்காணிப்பை தீவிரப்படுத்திய உள்துறை அமைச்சகம்