விண்வெளிக்கு சுற்றுலா சென்று பத்திரமாக பூமிக்கு திரும்பிய 6 பெண்கள்

டெக்சாஸ்: அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸிற்கு சொந்தமான ப்ளு ஆர்ஜின் விண்வெளி
நிறுவனம் தயாரித்துள்ள நியூ ஷெப்பர்ட்-31 விண்கலத்தில் சுற்றுலா சென்ற ஆறு பெண்கள் இன்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.
விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச்செல்வதற்காக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கடந்த சில ஆண்டுக்கு முன் நியூ ஷெப்பர்ட்-31 என்ற விண்கலத்தை ப்ளு ஆர்ஜின் நிறுவனம் வாயிலாக தயாரித்துள்ளார்


இந்த விண்கலத்தில் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி உள்பட 6 பெண்கள் மேற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு சுற்றுலா சென்று விட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பினர். முன்னதாக புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் கவுன்ட்டவுன் துவங்கியது. வெற்றிகரமாக விண்ணை நோக்கி இயங்கிய நியூ ஷெப்பர்ட்-31 விண்கலம் விண்வெளி குறீப்பிட்ட பகுதிக்கு சென்று விட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது.


கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு, பெண்கள் மட்டுமே விண்வெளிப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.

Advertisement