தாசில்தார் பொறுப்பேற்பு

வானூர்: வானூர் தாலுகா புதிய தாசில்தாராக வித்யாதரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வானூர் தாசில்தாராக பணியாற்றிய நாராயணமூர்த்தி பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக விழுப்புரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றிய வித்யாதரன், வானூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். வித்யாதரன் நேற்று பதவியேற்று கொண்டார். சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் சரவணன் மற்றும் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement